ஸ்ரீரங்கம் ஜீயர் மட கோயில்-திறக்க ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் பலஹரி புருசோத்தம ராமானுஜ ஜீயர் மடத்திலுள்ள சீனிவாச பெருமாள் கோயிலை பக்தர்கள் தரிசிக்க திறக்கும்படி திருச்சி போலீஸ் கமிஷனருக்கு மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கத்தில் பலஹரி புருசோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. மடாதிபதி லட்சுமண ராமானுஜ ஜீயர் (88) மாயமானதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், வைஷ்ணவ தர்மசம்ரக்ஷண சபை தலைவர் கோவிந்த ராமானுஜர் தாசா மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, ஜீயர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து மனு பைசல் செய்யப்பட்டது.
இம் மனு விசாரணையின் போது மடத்திலுள்ள சீனிவாச பெருமாள் கோயிலை, மடத்திலுள்ள ஜீயரின் உதவியாளர் பத்ரி, அவரது மனைவி கோதராணி திறக்க மறுப்பதாகவும், பக்தர்கள் சிரமத்திற்குள்ளாவதாகவும் கோவிந்த ராமானுஜ தாசா குற்றம் சாட்டினார்.
இது குறித்து தனி நீதிபதி விசாரணைக்கு பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இதை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஏற்கனவே பெஞ்ச் விசாரணையின் போது சீனிவாச பெருமாள் கோயிலை திறக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பக்தர்கள் சிரமும் இன்றி தரிசனம் செய்ய கோயிலை திறக்க போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications