வன்னியர் சொத்து நல வாரியம்-பாமக வரவேற்பு
விழுப்புரம்: தமிழக அரசு வன்னியர் பொதுச் சொத்துகள் நல வாரியத்தை அமைப்பதற்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் எம்எல்ஏக்கள் செந்தமிழ்செல்வன், கலிவரதன் ஆகியோர் கூறுகையில்,
வன்னியர் சங்கம் சார்பில் வரும் 17ம் தேதி தனி இடஒதுக்கீடு மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மாநாடு நடைபெறுகிறது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் கிராமங்களில் சமுதாயக் கூடங்களை அமைக்க அன்புமணி ராமதாஸ் முடிவு செய்துள்ளார். தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதி மூலம் இதை அவர் அமைக்கவுள்ளார்.
வன்னியர் பொதுச் சொத்துக்கள் நல வாரியத்தை முதல்வர் கருணாநிதி அமைத்துள்ளார். இதனால் வன்னியர்களுக்கு பயன் ஏற்பட்டால் அதை வரவேற்போம். வன்னியர்களின் ஏராளமான சொத்துக்கள் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளன என்றார்.
கருணாநிதி..என்னையும் அழையுங்கள்...:
இந் நிலையில் பாமக சார்பில், சென்னையில் 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதி்ல் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
வழக்குகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயம் விரும்புகிறது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் முறையிட என்னையும் அழையுங்கள். நானும் வருகிறேன். இல்லாவிட்டால், முதல்வரிடம் நான் அழைத்துச் செல்கிறேன்.
பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், இடஒதுக்கீட்டில் இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கிறது. ஆனால், சில குறைகள் உள்ளன. அவற்றைப் போக்க போராடுவோம். அதில் வெற்றி பெறுவோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications