சட்டத்தை கையில் எடுக்காதீர்கள்-ஆஸி. பிரதமர்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், இந்திய மாணவர்கள் யாரும் அவசரப்பட்டு சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 12ம் தேதி மெல்போர்ன் நகரில் மூன்று இந்தியர்கள் மீது 70 பேர் கொண்டு கும்பல் தாக்குதல் நடத்தியது. இது இந்தியர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட இந்தியாவின் புனேவில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வரும் பரூக் தோன்டி என்ற எழுத்தாளர் ஆஸ்திரேலியர்கள் தாக்கினால், பதிலுக்கு இந்தியர்களும் தாக்க வேண்டும். கணக்குகளை உடனுக்குடன் தீர்த்து கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூடி கூறுகையில்,

இந்திய சமூகத்தினர் பதில் செயல்களில் ஈடுபட வேண்டும் என எண்ணுகின்றனர். அவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா சட்டப்படி வாழும் ஒரு நாடு. இந்நாட்டு குடிமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். அதை தங்கள் கைகளில் எடுத்து கொள்ள கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+