போர் விமானங்கள் போதாது-விமானப் படை தளபதி

காந்தி நகர் வந்த அவர் அங்குள்ள தென் மத்திய ஏர் கமாண்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நாயக் கூறுகையில், நம்மிடம் தற்போது உள்ள போர் விமானங்களின் பலம் போதுமானதாக இல்லை. சீனாவிடம் உள்ளதை விட மூன்றில் ஒரு பங்கே நம்மிடம் உள்ளது. எனவே நாம் அதிகளவிலான போர் விமானங்களை வாங்க வேண்டியுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில் அரசு முழு ஆதரவைத் தந்து கொண்டிருக்கிறது. நிதிப் பிரச்சினையோ அல்லது வேறு பிரச்சினைகளோ இதில் குறுக்கிடுவதில்லை.
இருப்பினும் எல்லாவற்றையும் உடனடியாக வாங்கி விட முடியாது. எந்த ஒப்பந்தம் செய்தாலும், 3 ஆண்டுகளுக்குப் பிறகே அவை நமது கைக்கு வந்து சேரும்.
போர் விமானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியம். எல்லைப் பகுதியைக் காக்க அவை பிரதானமாக பயன்படுகிறது என்றாலும் கூட ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாப்பது போர் வி்மானங்கள்தான்.
விமானப் படையைச் சேர்ந்த 100 விமானிகள் சுய ஓய்வு பெற வி.ஆர்.எஸ். கோரி விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் போதிய பதவி உயர்வுகள் கிடைக்காதது தான். விமானப் படையின் அமைப்பு பிரமிட் போல. இங்கு உயர் பதவிகள மிக மிகக் குறைவு. 20, 25 ஆண்டுகள் ஒரே பதவியில் இருந்தால் விமானிகளுக்கு மனச் சோர்வு ஏற்படுவது சகஜம் தானே.
இப்போது வர்த்தக விமானத்துறையில் கொஞ்சம் சரிவு ஏற்பட்டுள்ளதால் விமானிகள் வி.ஆர்.எஸ். கோருவது குறைந்துள்ளது. விமானப் போக்குவரத்துத்துறை வளர்ச்சி கண்டால் விமானப் படையிலிருந்து விமானிகள் விலகுவது அதிகரிக்கலாம்.
இந்திய வான் எல்லையை சீனா அத்துமீறுவதாக வரும் தகவல்கள் தவறானவை. அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை. எதி்ர்காலத்தில் அப்படி ஏதும் நடக்காமல் தவிர்க்க நமது படை பலத்தை நாம் அதிகரித்தாக வேண்டும்.
சீனாவிடம் நம்மைப் போல 3 மடங்கு விமானங்கள் உள்ளன என்றார் நாயக்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications