காந்தமால் பாதிரியார் கொலை- ஐவருக்கு ஆயுள் தண்டனை
புவனேஸ்வர்: நாட்டை உலுக்கிய காந்தமால் கலவரத்தில், பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் வி.எச்.பி. தலைவர் லட்சுமாணந்த சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.
நூற்றுக்கணக்கான சர்ச்சுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்தக் கலவரம் தொடர்பாக 827 வழக்குகளைத் தொடர்ந்தது ஒரிசா அரசு. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 437 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்ட வழக்கு உள்பட 354 வழக்குகள் விசாரணை அளவில் உள்ளன.
இந்த வழக்குகளை விசாரிக்க 2 விரைவு நீதிமன்றங்களை ஒரிசா அரசு அமைத்தது.
இந்த நிலையில், காந்தமால் மாவட்டம் ததமஹா கிராமத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்து வந்த அக்பர் திகால் என்பவரை கொலை செய்த வழக்கில், சபீதா பிரதான், பாபு பிரதான், அபினாஷ் பிரதான், தர்மராஜ் பிரதான், மனியா பிரதான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி சோபன் குமார் தாஸ் தீர்ப்பளித்தார்.
இவர்களையும் சேர்த்து இதுவரை காந்தமால் கலவரம் தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 12 பேருக்கு நான்கு முதல் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை வரை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் முதல் முறையாக ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications