மருத்துவமனையாகும் கோபாலபுரம் வீடு - பத்திரத்தில் கையெழுத்திட்ட அழகிரி, ஸ்டாலின், தமிழரசு
சென்னை: முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இலவச மருத்துவமனையாகிறது. இந்த மருத்துவமனைக்கு அஞ்சுகம் முத்துவேலர் மருத்துவமனை என பெயரிடப்படுகிறது. இதுதொடர்பான பத்திரப் பதிவு நேற்று நடந்தது.
முதல்வரின் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் இதுதொடர்பான பத்திரத்தில் கையெழுத்திட்டு முதல்வரிடம் ஒப்படைத்தனர்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றபோது அந்த மேடையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பில் கோபாலபுரத்தில் அவர் தற்போது வசித்து வரும் இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 1968-ல் தன் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளதாகவும், தற்போது அந்த இல்லத்தினை தன்னுடைய காலத்திற்கு பிறகும், தன் துணைவியார் தயாளுஅம்மாள் காலத்திற்கு பிறகும், தமிழக அரசுக்கோ, அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடைமையாக்குவது என்றும், அந்த இல்லத்தில் ஒரு இலவச மருத்துவமனையினை தன் தாய் தந்தையர்களான அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் நடத்துவதென்றும், அதற்கு தன் மனைவி, மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பினையொட்டி நேற்று முதல்வரின் புதல்வர்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மூவரும் அவர்கள் பெயரால் 1968-ஆம் ஆண்டு செட்டில்மென்ட் செய்யப்பட்டிருந்த அந்த இல்லத்தினை முதல்வர் அறிவித்தவாறு அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் இலவச மருத்துவமனையினைத் தொடங்குவதற்கு ஏதுவாக, பத்திரப்பதிவாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு முதல்வரிடம் ஒப்படைத்தார்கள்.
இந்த நிகழச்சியின்போது முதல்வரின் துணைவியார் அப்போது தயாளு அம்மாள் உடன் இருந்தார்
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications