டெல்லியில் விஜயகாந்த் நாளை உண்ணாவிரதம்- குவியும் தொண்டர்கள்

விஜயகாந்த்துடன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் விமானம் மூலம் சென்றுள்ளனர். தேமுதிகவினரும் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத் தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் விமானம் மற்றும் ரயில் மூலம் டெல்லிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்று பிற்பகல் 1 மணி அளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக இன்று காலை 7.15 மணிக்கு மாநில தொழிற் சங்க பேரவைத் தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பயணமானார்கள்.
காலை 9.50 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் டெல்லிக்கு சென்றனர். அதே போல் காலை 10.30 மணிக்கு டெல்லி சென்ற விமானத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
அதேபோல, விழுப்புரம் மாவட்ட செயலாளர் எஸ்.வெங்கடேசன் தலைமையில் 250 பேர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதே போல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானங்களில் பயணமானார்கள்.
மேலும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெங்களூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.
ஆயிரக்கணக்கில் தேமுதிகவினர் டெல்லியில் காலை முதலே குவிந்து வருகின்றனர். அவர்களை கல்யாண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கும் பொறுப்பு மாநில இளைஞர் அணிச் செயலாளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர டெல்லியில் உள்ள தேமுதிகவினரின் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
தேமுதிகவினர் பெரும் திரளாக டெல்லி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலில் தனி ரயிலை இயக்க தென்னக ரயில்வேயை தேமுதிக அணுகியதாம். முதலில் தருவதாக கூறிய தென்னக ரயில்வே, பின்னர் யாரிடமிருந்து எந்த மாதிரியான உத்தரவு
வந்ததோ தெரியவில்லை, முடியாது என்று கூறி விட்டதாம்.
இருந்தாலும் விடாத தேமுதிக தலைமை, கட்சியினரை விமானங்கள் மூலம் டெல்லி வந்து குவியுமாறு கேட்டுக் கொண்டதால், அவர்களும் பல்வேறு நகரங்களிலிருந்து விமானம் மூலம் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications