தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை தருவது குறித்து பரிசீலனை - ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Chidambaram
சென்னை: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை வந்த ப.சிதம்பரம் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இருவரும் விவாதித்தோம்.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குறித்த தமிழக முதல்வர் கருணாநிதியின் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.

இதுதொடர்பாக தமிழக அரசிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதை நாங்கள் பரிசீலிப்போம்.

இலங்கையில் உள்ள முகாம்களில் தங்கவ வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மறு குடியேற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழர் முகாம்களுக்குச் சென்று இந்திய எம்.பிக்கள் குழு பார்வையிடுவது குறித்தும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+