மாவோயிஸ்டுளை பழிவாங்குவேன்-மகன் சபதம்!
டெல்லி: எனது தந்தையைக் கொன்று விட்டீர்கள். ஆனால் உங்களை நான் சும்மா விட மாட்டேன். போலீஸில் சேர்ந்து உங்களைப் பழிவாங்குவேன், உங்களைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் 7 வயது மகன் ஆவேசமாக கூறியுள்ளான்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவார் என்பவரை கடத்திச் சென்ற மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அவரது தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனால் ஜார்க்கண்ட் மாநிலம் மட்டும் அல்லாமல் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இந்த நிலையில் இந்துவாரின் 7 வயது மகன் அபிஷேக் இந்துவார், மாவோயிஸ்டுகளை பழி தீர்ப்பேன் என்று சபதம் எடுத்துள்ளான்.
இதுகுறித்து ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில், கூடியிருந்த செய்தியாளர்கள் முன்பு அவன் கூறுகையில், எனது தந்தையை கொன்று விட்டீர்கள். நான் போலீஸில் சேருவேன், உங்களை எல்லாம் கொல்லாமல் விட மாட்டேன், பழிவாங்காமல் விட மாட்டேன் என்று ஆவேசமாக கூறினான் அபிஷேக்.
ஜார்க்கண்ட் காவல்துறை சிறப்புப் பிரிவில் உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்து வந்தவர் பிரான்சிஸ் இந்துவார். இவரைக் கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், 3 மாவோ தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
செப்டம்பர் 30ம் தேதி கடத்தப்பட்டார் பிரான்சிஸ். அவரது நேற்று காலை ராஞ்சி - ஜாம்ஷெட்பூர் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications