10 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தங்க அனுமதி மறுப்பு!
சென்னை: செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 10 இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. அவர்கள் மீதான வழக்குகள் முடிவடைந்ததும் வேறு நாட்டுக்கு அவர்கள் போய் விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பத்து பேரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தேசிய பாதுகாப்பு கருதி இவர்கள் தமிழ்நாட்டில் தங்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாம்களில் 64 இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இந்த பத்து பேரும் அடங்குவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்முதல் செய்தது, தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கிக் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களில் குறிப்பிட்ட 10 பேர் தமிழகத்தில் நிரந்தரமாக தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த பத்து பேரும் வழக்குகள் முடிந்ததும் அவரவர் விரும்பும் நாடுகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு அனுமதித்திருந்தது. ஆனால் இவர்கள் இந்தியாவிலேயே தங்க விரும்புவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் தேசிய பாதுகாப்பு கருதி அந்தக் கோரிக்கையை ஏற்க இயலாத நிலை உள்ளது.
இந்த முகாம்களில் இருந்த 45 பேர் கடந்த மூன்று மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை வழக்கமான முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications