For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிக்கிய 100 பாம்புகள்

Google Oneindia Tamil News

More than 100 snakes captured in Nellai medical college campus
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட பாம்புகளை பாம்பாட்டிகளை வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

மருத்துவமனை வாளகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி வாளகத்தை சுற்றி முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் அங்கு பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை மாணவிகள் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பாம்புகளை பிடிக்கும் நடவடிக்கையை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் மோகன் மேற்கொண்டார்.

இதையடுத்து நெல்லை, பேட்டை, மேலப்பாளையம், மானாமதுரை, ஆறுமுநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாம்பு பிடிக்கும் தொழிலாளிகள் 8 பேர் வரவழைக்கப்பட்டனர்.

நேற்று காலை மருத்துவமனை வாளகத்திற்கு வந்து அவர்கள் மகுடிகளை எடுத்து ஊத ஆரம்பித்தனர். மகுடி ஓசையைக் கேட்டதும் ஆங்காங்கு பதுங்கிக் கிடந்த பாம்புகள் மெதுவாக வெளியே வர ஆரம்பித்தன.

முட்புதர்களில் இருந்து சரமாரியாக வெளியே வந்தன. கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சாரைபாம்பு என சரமாரியாக வந்தன. அவற்றை பாம்பாட்டிகள் மடக் மடக் என்று பிடித்தனர்.

மொத்தமாக, 25 பெரிய பாம்புகளும், 75 சிறிய பாம்புகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பாம்புகள் சிக்கின.

பாம்புகளைப் பிடித்த விஷயத்தை பின்னர் வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன் பின்னர் வனவர் மணிமாறன், வனக்காப்பாளர் அண்ணாமலை, வனக்காவலர்கள் துக்கமுத்து, வெள்ளைசாமி ஆகியோர் பிடிபட்ட பாம்புகளை இரும்பு கூண்டில் அடைத்து எடுத்து சென்று மேலப்பாட்டம் மலை பகுதியில் வி்ட்டனர்.

அரசு மருத்துவமனை வாளகத்தில் நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த பாம்புகள் தொல்லைக்கு தீர்வு ஏற்பட்டதால் நர்சிங் மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடந்த 2003ம் ஆண்டு இதே போன்று மெகா பாம்பு வேட்டை நடத்தி 100க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுபடியும் இப்படி ஒரு வேட்டை நடத்தாத வகையில், பாம்புகள் ஊடுறுவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைளை மருத்துவனை நிர்வாகம் எடுப்பது நல்லது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X