32 பேருக்கு தலா ரூ. 10,000 உதவி-முதல்வர் வழங்கினார்
சென்னை: மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு கலைஞர் அறக்கட்டளை சார்பில் தலா ரூ. 10 ஆயிரத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக முதல்வர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ. 5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டித் தொகையினை கொண்டு ஏழை எளியோர்க்கு உதவி தொகை 2005 நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007ல் திறந்து வைத்த முதல்வர், கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
தற்போது மீதமுள்ள ரூ. 4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் கிடைத்த வட்டி தொகை 32 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் விதம் மொத்தம் ரூ. 3.2 லட்சம் நிதியை நேற்று முதல்வர் வழங்கினார். இதற்காக தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பணத்தை செலவழித்து சென்னை வர வேண்டியிருப்பதால், விரைவில் இந்த பணத்தை காசோலையாக அவர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications