இந்திய கோர்ட் மீது கஸாபுக்கு நம்பிக்கையில்லையாம்!
மும்பை: இந்திய நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என அவ்வழக்கில் கைதாகியுள்ள தீவிரவாதி அஜ்மல் கஸாப் மனு அளித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்ய்பட்ட தீவிரவாதி அஜ்மல் கஸாப் மீது 183 பேரை கொன்றது உள்ளிட்ட பல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தனது கைப்பட உருது மொழியில் எழுதிய மனு ஒன்றை சிறை அதிகாரிகள் மூலம் மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் நீதிபதி எம்எல் தஹாலியானிடம் கொடுத்தார்.
அந்த கடிதம் மராத்தியில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதில், எனக்கு இந்திய நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றது.
நீதிபதி இந்த கடிதத்தை நீங்கள் தான் எழுதுனீர்களா? என கஸாப்பை கேட்டார். அவர் அதற்கு ஆம் என்று பதிலளித்தார். ஆனால், நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications