மகாராஷ்டிரா, ஹரியாணாவில் மீண்டும் காங். வெல்லும்- கருத்துக் கணிப்பு
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியி்ட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் மகாராஷ்டிராவில் எந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் தொங்கு சட்டசபை உருவாகலாம் என கருதப்பட்டது.
ஆனால், தேர்தலுக்கு பின்னர் சிஎன்என்-ஐபிஎன் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த எக்ஸிட் போல் முடிவு விவரம்:
மொத்தமுள்ள 288 தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி 135 முதல் 145 இடங்களை கைப்பற்றும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 75 முதல் 85 இடங்களும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 65 தொகுதிகளும் கிடைக்கும். இது கிட்டதட்ட கடந்த 2004 தேர்தல் முடிவுகளை போல் தான் இருக்கும்.
பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 105 முதல் 115 இடங்களே கிடைக்கும். இதில் சிவசேனா 55 முதல் 65 இடங்களையும், பாஜக 45 முதல் 55 இடங்களையும் கைப்பற்றும்.
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சிக்கு 8 முதல் 12 சீ்ட்கள் வரை கிடைக்கும். மற்றவர்கள் 25 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெறுவர் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ் கருத்துக் கணிப்பு:
அதே போல ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 89, தேசியவாத காங்கிரசுக்கு 48 தொகுதிகளும் என அந்த கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜக 51, சிவசேனா 62 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 57 இடங்களில் வென்று தனித்து ஆட்சியமைக்கும் என ஸ்டார் நியூஸ் தெரிவித்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications