குற்றாலத்தில் குவியும் சபரிமலை பக்தர்கள்: போலீஸ் 'மிஸ்ஸிங்'-குடிமன்கள் கொண்டாட்டம்!
குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் போலீஸார் போதிய அளவில் இல்லாததால் ஜட்டியுடன் ஆட்டம் போடும் குடிகாரர்கள் கொட்டம் குரங்குகளையே பீதிக்குள்ளாக்கி வருகிறது.
குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை அடுத்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் குற்றாலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அருவிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பிற்கு பழைய குற்றாலம், மெயினருவி ஆகியவற்றில் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் 'குடி'மகன்களை கட்டுபடுத்த முடியாத, சூழல் உள்ளது.
மெயினருவியில் நேற்று மாலை போலீசார் பற்றாக்குறை காரணமாக போதை தலைக்கேறிய சிலர் பாதுகாப்பு வளைவின் மீது ஏறி தடாகத்தில் தலைகுப்புற டைவ் அடித்த வண்ணம் இருந்தனர்.
போதிய அளவில் போலீஸாரைக் குவித்து இந்த போதை பார்ட்டிகளை கட்டுப்படுத்தினால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நிம்மதியாக இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications