ஜார்க்கண்ட் சட்டசபை கலைப்பு-கேபினட் ஒப்புதல்
டெல்லி: குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபையைக் கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 9 மாதங்களாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் சட்டசபை கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.
இந்த நிலையில் 3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் ப.சிதம்பரம், அம்பிகா சோனி ஆகியோர் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையை கலைக்க மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன் அளித்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் முறையான ஒப்புதலுடன் இது நடைமுறைக்கு வரும்.
இதனால், அங்கு விரைவில் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுகொள்ளப்படும் என்றனர்.
கடந்த ஜனவரி 19ம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து அங்கு சட்டசபை முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications