68,000 தமிழர்களை மறு குடியேற்றம் செய்து விட்டது இலங்கை - பாலு

சமீபத்தில் தமிழகத்திலிருந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த பத்து எம்.பிக்கள் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்று இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டு, ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசி விட்டு தமிழகம் திரும்பினர்.
அவர்கள் பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை ஒன்றைக் கொடுத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்கள் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், 68 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் அகதிகள் முகாமில் இருந்து தமிழர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே 58 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
நேற்றும், இன்றும் மேலும் பலர் சொந்த ஊர்க ளுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார்கள். நேற்று யாழ்ப்பாணத்துக்கு 2 ஆயிரத்து 955 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னாருக்கு 764 பேரும், வவுனியாவுக்கு 890 பேரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இன்று முல்லைத்தீவுக்கு 1,021 தமிழர்களும் யாழ்ப்பாணத்துக்கு 3,200 பேரும், வவுனியாவுக்கு 1000 பேரும், திரிகோணமலைக்கு 59 பேரும், மட்டக்களப்புக்கு 2 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதன்படி 2 நாட்களிலும் மொத்தம் 10 ஆயிரத்து 241 தமிழர்கள் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையும் சேர்த்தால் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்கு திரும்பி இருக்கிறார்கள்.
கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் ...
இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்றார் டி.ஆர்.பாலு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications