இங்கிலாந்து அரண்மனையில் வீராசாமி ஹோட்டல் சாப்பாடு!

இன்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் அவர் இங்கிலாந்து கிளம்பினா்.
முதலில் லண்டன் செல்லும் அங்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் இருந்து டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியைப் பெற்றுக் கொள்வார்.
பிரதீபாவின் வருகையையொட்டி நாளை பங்கிங்காம் அரண்மனையில் பாலிவுட் இசை, நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரண்மனையில் நடக்கும் முதல் இந்தி இசை நிகழ்ச்சி இதுவே ஆகும். இந்த நடன நிகழ்ச்சிகளை சிம்மி குப்தா தலைமையிலான இங்கிலாந்து-இந்தியக் குழு நடத்தும்.
இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற தென் இந்திய உணவகமான வீராசாமி ரெஸ்டாரண்டில் இருந்து உணவு வகைகள் பரிமாரப்படவுள்ளன.
பின்னர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், எதிர்க்கட்சி தலைவர் டேவிட் கேமரூன் ஆகிய தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துகிறார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக நாத்பூரி, குலாம்னூன் என்ற இரு இந்தியர்கள் ஏலத்தில் வாங்கிய மகாத்மா காந்தியின் கடிதங்கள் மற்றும் அவரது காதி உடையை ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளனர்.
இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதீபா, சைப்ரஸ் நாட்டிற்கு செல்கிறார்.
அந்த நாட்டு அதிபர் டெமட்ரிஸ் கிறிஸ்டோபியாஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்குப் பின் 20 ஆண்டுகள் கழித்து சைப்ரஸ் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி பிரதீபா தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications