தாழ்த்தப்பட்டோருக்கு மதம் இல்லை-திருமா
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
காஞ்சிபுரத்தில் அகில இந்திய சமத்துவ வீரர் படைக் குழு சார்பில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் புத்தர் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்லர். எந்த மதத்திலும் சேர்க்காததால் புத்த மதத்தை தழுவுகின்றனர். புத்த மதம் வேரூன்றியது காஞ்சிபுரத்தில் தான்.
அதனால் தான் இங்கு பல நூறு சிலைகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்டோரை தாழ்நிலையில் இருந்து வெளிக் கொணர்ந்து தன்மானத்துடன் வாழ வைப்பதே இக்கட்சியின் நோக்கம் என்றார்.












Click it and Unblock the Notifications