புதிய நிபுணர் குழு-உச்ச நீதிமன்ற யோசனையை நிராகரித்த கேரளம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பலம் என்ன, அதில் எத்தனை அடிவரை நீரை தேக்கலாம் என்பது குறி்த்து ஆராய புதிதாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் பெஞ்ச் கூறிய யோசனையை கேரளா நிராகரித்துவிட்டத.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்க அனுமதிக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும், புதிய அணை கட்டுவதற்கு சர்வே நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் டி.கே. ஜெயின், முகுந்தக சர்மா, ஆர்.எம். லோதா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அணையில் எந்த அளவு வரை நீரைத் தேக்கலாம், அணையின் பலம் என்ன என்பது குறித்து சோதனை செய்ய தமிழகம், கேரளம், மற்றும் மத்திய நீர் வளக் கமிஷன் ஆகியவை சார்பில் நிபுணர்கள் அடங்கிய முத்தரப்பு குழுவை நியமிக்கலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
ஆனால், இந்த யோசனையை கேரள அரசின் வழக்கறிஞர் நிராகரித்தார்.
கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் கூறுகையில், கடந்த முறையும் இதேதான் நடந்தது. தமிழகம் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி அந்த மாநிலத்துக்குச் சாதகமாகவும் கேரளம் சார்பில் நியமிக்கப்படுகிறவர் கேரளத்துக்குத் சாதகமாகவும் கருத்து தெரிவித்தார்கள்.
மத்திய அரசு நியமித்தவர்களின் போக்கால் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இப்போது நீங்கள் மத்திய அரசு சார்பில் 3 உறுப்பினர்களை நியமிக்கலாம் என்கிறீர்கள். மீண்டும் அதிக உயரம் வரை தண்ணீரைத் தேக்கலாம், அணைக்கு ஆபத்து இல்லை என்று தான் கூறப்படும். இதை நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், எங்கள் யோசனையை அப்படியே நிறுத்திக் கொள்கிறோம், இந்த பிரதான வழக்கு விசாரணை தொடரட்டும் என்றனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications