கள்ள துப்பாக்கி தயாரி்ப்பு-8 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கள்ள துப்பாக்கி தயாரித்து விற்று வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரப்பகுதி, சுற்றுபுற பகுதிகளில் கள்ள துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் தாயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஐஜி கண்ணப்பன், எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவுபடி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி, தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சுரேஷ்குமார், உள்ளிட்ட தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு தொடர்பான வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.
தென்காசியில் மோட்டார் பைக்கில் வந்த புன்னயாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வைரமுத்து, வாசுதேவநல்லூர் தலையணை காணிகுடியிருப்பை சேர்ந்த ரவிதாமஸிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து ஒரு ரிவல்வார், ஒரு நாட்டு ஓற்றைகுழல் துப்பாக்கி, ரிவல்வார தோட்டா 3, 10 டெட்டனேட்டர்கள், 16 காலி தோட்டா, வேல்கம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் துப்பாக்கி செய்து கொடுத்தவர் விகேபுரத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஆழ்வார் என தெரிய வந்தது. ஆழ்வார் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு ஓற்றை குழல் துப்பாக்கி, துப்பாக்கி செய்ய பயன்படுத்த கூடிய இரும்பு குழாய்கள், கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக புளியங்குடியை சேர்ந்த பெரியசாமி, தெற்கு காணிகுடியிருப்பை சேர்ந்த தினகர், காவேரி என்ற காபிரியேல், அருளாட்சியை சேர்ந்த சிங்கதுரை, புளியங்குடியை சேர்ந்த தங்கம், கைது செய்யப்பட்டனர். 2 நாட்டு கைதுப்பாக்கிகள், 35 கைதுப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications