அதிகாலையில் உறவுக்கு அழைப்பு- வர மறுத்த கணவரைக் கொன்ற பேராசிரியை
ஜெயங்கொண்டம்: அதிகாலையில் உறவுக்கு அழைத்தார் பேராசிரியை மனைவி. கணவரோ, நீ கல்லூரியில் யாருடன் இருந்தாய் என்று கேட்டு சண்டை பிடிக்க ஆத்திரமடைந்த மனைவி, கணவரைக் கொலை செய்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம். தா.பழூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சுதாமதி. தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு செல்வம் அதிகாலை மர்மமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் மனைவி சுதாமதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
செல்வம் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். செல்வத்தின் மைத்துனர் வசந்தகுமாரை பிடித்து விசாரித்து வந்தனர். அவர் கொடுத்த சில தகவல்கள் போலீஸாரை திடுக்கிட வைத்தது.
இதையடுத்து சிகிச்சை முடிந்து திரும்பிய சுதாமதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுதாமதியே கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சுதாமதி கொடுத்த வாக்குமூலம்..
சம்பவத்தன்று எனது கணவர் செல்வத்தை விடியற்காலையில் உடலுறவுக்கு அழைத்தேன். அப்போது அவர் வர மறுத்தார். இதனால் கோபமடைந்த நான், நீ வேறு எந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்தேன்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், நீ கல்லூரிக்கு செல்கிறாயே, நீ வேறு யாருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறி கன்னத்தில் அறைந்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்து எனது கணவர் செல்வம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் நான் சுதாரித்து கொண்டு எனது கணவரின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினேன். இதில் பலத்த வெட்டுப்பட்டு எனது கணவர் சம்பவ இடத்திலேயே செத்தார்.
இந்த தகராறில் எனது குழந்தைக்கு அருகில் இருந்த கட்டிலில் மோதி காயம் ஏற்பட்டது. உடனே அரிவாளால் என்னையே நான் வெட்டிக்கொண்டு காயம் ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர் எனது சகோதரன் வசந்தகுமாரிடம் கூறி, இதை வெளியில் சொன்னால் குழந்தைகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினேன். இதனால் அவனும் என்னை அப்போது காட்டிக் கொடுக்கவில்லை என்றார்.
இதையடுத்து சுதாமதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications