கடலோர தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும்- வானிலை மையம்
சென்னை: கடலோர தமிழகத்திலும், புதுவையிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை, தமிழகம், ஆந்திரா அருகே வங்கக் கடலில், நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தமிழகம் அருகே தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக சீர்காழி, மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பெய்தது.
புதுச்சேரி, ராமேஸ்வரம், கோவை, திருப்பூர், ஈரோடு, பெருந்துறை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கடலூர், பரங்கிப்பேட்டை, கொள்ளிடம், மயிலாடுதுறை, பாம்பன், நன்னிலம், வலங்கைமான் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழையும் பெய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில்...
சென்னையில் இன்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. சில இடங்களில் லேசான தூறல் மழை காணப்பட்டது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications