மத்திய தகவல் ஆணைய தலைவர் ஆவாரா கிரண்பேடி?
டேராடூன்: மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியை நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் மற்றும் சமூக போராளி அன்னா ஹசாரே ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய தகவல் ஆணையத்தின் தலைமை பதவிக்கு துடிப்பும், நேர்மையும் கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், நேர்மையானவர் என பெயரெடுத்தவருமான கிரண் பேடியை இப்பதவியில் அமர்த்த வேண்டும் என நடிகர் அமிர் கான் உள்ளிட்ட பிரபலங்கள், அமைப்புகள் ஏற்கனவே பிரதமரிடம் கோரியுள்ளனர்.
கிரிமினல்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்திலேயே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டுள்ள கிரண்பேடி தான் தகவல் ஆணைய தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என மகசேசே விருது பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், சந்தீப் பாண்டே ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தகவல் ஆணையத்தின் அடுத்த தலைவராக கிரண்பேடியை நியமிக்கவில்லையெனில், அதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும் என்று யோகி ராம்தேவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்த வஜாஹத் ஹபிபுல்லா, கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications