ஆக்கிரமிப்பு-'டிராபிக்' ராமசாமிக்கு கொலை மிரட்டல்
சென்னை: சென்னை தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவிலை போலீஸார் அகற்றினர். இதையடுத்து இதற்குக் காரணமாக இருந்ததற்காக சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாண்டிபஜார் தென் மேற்கு போக்ரோட்டில் புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. 8-க்கு 8 அகலத்தில் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு அதன் மீது சுமார் 12 அடி உயர கோபுரமும் கட்டப்பட்டது. கோவில் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிசேகமும் செய்ய வேலைகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் அந்த கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அந்தக் கோவிலை இடித்துத் தள்ள மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கூடி விட்டனர். இருப்பினும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் இடித்துத் தள்ளப்பட்டது.
கோவில் இடிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சிலர் டிராபிக் ராமசாமி வீட்டை முற்றுகையிட்டனர். சிலர் அவரை அடிக்கவும் முற்பட்டனர். அவரைக் கொன்று விடுவதாகவும் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தற்போது மாம்பலம் போலீஸில் டிராபிக் ராமசாமி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications