ராகிங்கில் ஈடுபட்ட 28 உ.பி. மாணவர்கள் அதிரடி டிஸ்மிஸ்
வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் மாணவர்களிடம் ராகிங் செய்தும், கல்லூரி விடுதியை சூறையாடியும் அக்கிரமம் செய்த 28 சீனியர் மாணவர்கள் கல்லூரியை விட்டு அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி, ராகிங் செய்ததை கல்லூரி முதல்வரிடம் சொல்லியதற்காக முதலாமாண்டு படித்த மாணவர்களை, சீனியர் மாணவர்கள் மூர்க்கமாக தாக்கினர். மேலும் கல்லூரி விடுதியையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதையடுத்து 28 மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. கல்லூரியின் ராகிங் ஒழிப்பு கமிட்டி இதுகுறித்து விசாரணை நடத்தியது.
இந்த கமிட்டியின் முடிவுப்படி தற்போது 28 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களது டிசிக்களை அவர்கள் வாங்கிக் கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
28 பேரில் 2 பேர் (ஜங் பகதூர் சிங், பையூஷ் சிங்) நிரந்தரமாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். 13 பேர் 2 கல்வி ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேரும் ஒரு செமஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
--
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications