நெல்லையில் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்
நெல்லை: தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியிலும், ரோடுகளிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
பல இடங்களில் சுகாதாரம் சீர்கேடு அடைந்து காணப்படுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 80 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் சிறுவர்கள்.
தொடர்ந்து பலர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் இருப்பதால் பாளை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளது. நெல்லையில் தொடர்ந்து மழை பெய்வதால் சுகாதார பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மேலும் அம்பை, சிங்கை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications