பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்-டிரைவர் பலி
கொடைரோடு: மதுரை அருகே அரசு பஸ் மீது ஒரு கும்பல் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் டிரைவர் பலியானார்.
மதுரையில் இருந்து ஓசூரை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
8.45 மணியளவில் மதுரை அருகே பாண்டியராஜபுரம்- பள்ளப்பட்டி 4 வழிச்சாலையில் பஸ் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பஸ்ஸை வழி மறித்து சரமாரியாக கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியது.
இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து டிரைவர் யுவராஜுக்கும் (39) மண்டை உடைந்தது. அதிக அளவி்ல் ரத்தம் வெளியேறியதில் டிரைவர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை பயணிகள் இன்னொரு வாகத்தி்ல் ஏற்றி வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
அதே போல பள்ளப்பட்டி பிரிவு, வாடிப்பட்டி மாதா கோவில் அருகில் 2 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதிலும் பஸ்களின் கண்ணாடிகள் முழுவதும் சேதமடைந்தன.
இந்த சம்பவங்களால் அப் பகுதியி்ல் பதற்றம் உருவாகியுளளது. இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, டி.ஐ.ஜி. ரத்தீப் மித்தல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் போலீசார் இந்த நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு சென்ற கார் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பல பஸ்கள் உடைக்கப்பட்டன. பழனியில் ஒரு பஸ் எரிக்கப்பட்டது. இந் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பலியான அரசு பஸ்சின் டிரைவர் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications