மீண்டும் பாஜகவை நோக்கி கலாயாண் சிங்
லக்னெ: பாஜக முன்னாள் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் மீண்டும் பாஜகவில் இணையத் தயாராகிவிட்டார்.
உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் பல ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். பாஜகவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மரியாதை இல்லை, பிராமணர்களுக்கே மரியாதை தரப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலி்ன்போது கல்யாண் சிங்கை முலாயம் சிங் யாதவும் அமர்சிங்கும் சந்தித்து தங்களது கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து அவரும் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து (கட்சியில் சேராமல்) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், பாபர் மசூதி இடிப்புக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவருடன் முலாயம் சிங் கூட்டணி அமைத்ததை உத்தரப் பிரதேச முஸ்லீம்கள் ஏற்கவில்லை.
இதனால் முலாயம் சிங்குக்கு எதிராக வாக்களிததனர். இதன்மூலம் காங்கிரஸ் பெரும் லாபம் அடைந்தது. இதையடுத்து கல்யாண் சிங்கை தூரமாக விலக்க ஆரம்பித்தார் முலாயம் சிங். ஆனாலும் கல்யாண் சிங் முலாயமுடன் ஒட்டிக் கொண்டே இருந்தார்.
இந்த நிலை தொடர்ந்தால் ஒரு காலத்தில் தனது கட்சியி்ன் முக்கிய வாக்கு வங்கியாக விளங்கிய முஸ்லீம்களின் ஆதரவை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று அஞ்சிய முலாயம் சமீபத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
சமாஜவாதி கட்சியில் கல்யாண் சிங் இல்லை, எதிர்காலத்தில் அவரை கட்சியில் சேர்க்கும் எண்ணமும் இல்லை என்றார்.
இதனால் அதிருப்தியடைந்த கல்யாண் சிங்கின் மகன் ராஜ்பீர் சிங், சமாஜவாதி கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து கல்யாண் சிங்கும், ராஜ்பிர் சிங்கும் நிருபர்களிடம் கூறுகையி்ல்,
நான் சமாஜவாதி கட்சித் தலைவர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதால் உத்தரப் பிரதேசத்தில் பாஜக செல்வாக்கை இழந்தது. அதை தற்போது நினைத்து வருந்துகிறேன். பாஜக இழந்த செல்வாக்கை கட்சிக்கு மீட்டுத்தர தயாராக உள்ளேன்.
நான் ஒரு தீவிர ஆர்எஸ்எஸ்காரன். பாஜகவின் முன்னாள் தலைவர். கட்சிக்கு வெளியில் இருந்துகூட பாஜகவை வலுப்படுத்த நான் தயாராகவுள்ளேன்.
முலாயம் சிங் யாதவ் நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று என்னிடம் ஏராளமானோர் கூறினர். அப்போதெல்லாம் அவர்களது கருத்தை பொருட்படுத்தவில்லை. முலாயம் மீது நம்பிக்கை வைத்தேன்.
அக்கட்சித் தலைவர்கள் என்னுடன் இணக்கமாக இருந்ததால் முஸ்லீம் வாக்குகளை இழந்துவிட்டதாகக் கருதுகின்றனர்.
அரசியலில் வெற்றி, தோல்வி என்பது வழக்கமான ஒன்று. இது முலாயமுக்கு புரியவில்லை. தோல்வியை துணிந்து எதிர்கொள்ளும் திராணி அவருக்கு இல்லை.
முலாயம் சிங் நடவடிக்கையால் மாநிலத்தில் அனைத்து ஜாதி மக்களுமே அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். அவரது ஜாதியினரும் அவரை நம்பத் தயாராக இல்லை. பிராமணர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் என்று எந்த ஜாதியினரும் முலாயம் சிங்குக்கு வாக்களிக்கவில்லை.
சமாஜவாதி கட்சி குறித்தும், அக்கட்சிக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவு குறித்தும் காங்கிரஸ் சரியான தருணத்தில் புரிந்து கொண்டு முலாயமை விட்டு ஒதுங்கியது. காங்கிரஸின் இந்த புத்திசாலித்தனமான முடிவை பாராட்டியேத் ஆக வேண்டும்.
நான் பாஜகவில் இருந்து விலகியதும் முலாயமும், அமர் சிங்கும் என்னை சந்தித்து எனது கரங்களை இறுகப்பிடித்து அவர்களது கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நான் நிராகரித்தேன். சமாஜவாதி கட்சியில் இணைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை என்றார் கல்யாண் சிங்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து கேட்டதற்கு, எனது வாழ்நாளுக்குள் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
இதன்மூலம் கல்யாண் சிங் மீண்டும் பாஜகவில் இணையத் தயாராகிவிட்டது தெரிகிறது.
பாஜகவை விட்டு விலகிய பின் பாபர் மசூதி இடிப்புக்கு அக் கட்சியின் பிற தலைவர்களையும் ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியோர் மீது கல்யாண் சிங் குற்றம் சுமத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.
சந்தர்ப்பவாதத்துக்கு பல பெயர்கள் உண்டு. அதில் முலாயம் சிங் பெயரையும் கல்யாண் சிங் பெயரையும் சேர்த்தால் தப்பே இல்லை.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications