மாணவர்களுக்கு பாடம் எடுத்த போலீஸார்!
சென்னை: போலீஸாரை கடுமையாக கிண்டலடித்து சினிமாப் படங்களில் சித்தரிப்பதால் போலீஸார் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக குழந்தைகளிடேயே நிலவி வரும் மனோபாவத்தை மாற்றும் பொருட்டு இன்று சென்னை முழுவதும் காவல் நிலையங்களுக்கு மாணவர்களை வரவழைத்து சுற்றிக் காட்டி போலீஸார் குறித்து போலீஸாரே விளக்கிக் கூறிய வித்தியாசமான நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் சினிமாவைப் போல போலீஸாரைக் கிண்டலடிக்கும் துறை வேறு எதுவும் இல்லை. ஒருபக்கம் சீரியஸாக காட்டி போலீஸாரை உயர்த்திக் காட்டுவார்கள். ஆனால் பெரும்பாலும் காமடி என்ற பெயரில் போலீஸாரை ரொம்பக் கேவலமாக காட்டுவார்கள்.
வடிவேலுவை வைத்து காமெடி என்ற பெயரில் அவர்கள் உருவாக்கி வைத்த சிரிப்பு போலீஸ் என்ற வார்த்தை ரொம்பவே பாப்புலராகி விட்டது. இதனால் குழந்தைகள் மத்தியில் போலீஸார் என்றாலே சிரிப்பு போலீஸ் என்ற பதம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது.
இப்படிப்பட்ட எண்ணங்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பள்ளி குழந்தைகளை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக் காட்டி, காவல்துறையின் பணி என்ன, கடமை என்ன என்பதை விளக்கிக் கூறுமாறு மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று சென்னையில் உள்ள 80 காவல் நிலையங்களும் பொருட்காட்சி அரங்குகளாக மாறின. டிஜிபி முதல் சாதாரண கான்ஸ்டபிள் வரை அனைவரும் அணியும் சீருடை, சின்னங்கள், துப்பாக்கிகள், போக்குவரத்து சின்னங்கள் உள்ளிட்டவை அடுக்கி வைக்கப்பட்டு கண்காட்சியகம் போல மாற்றப்பட்டிருந்தன.
காலை 10மணிக்கு மாணவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வரத் தொடங்கினர். பூக்கடை காவல் நிலையத்தில், மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் நிற்க வைத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பாடம் நடத்தினர்.
போலீஸ் நிலையத்தை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா? என்று உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கேட்டதும்... சினிமாவில் பார்த்திருக்கிறோம் என்று ஓட்டு மொத்த மாணவர்களும் கூறினர்.
அதற்கு உதவி ஆணைர் ராதாகிருஷ்ணன், சினிமாவில் நீங்கள் பார்த்த போலீஸ் மாதிரி நாங்கள் இல்லை... உங்களுக்கு உதவுவதற்காகவே இருக்கிறோம். சினிமா போலீசை நம்பாதீர்கள் என்று கூறினார். பின்னர், பிஸ்டல் ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளை இயக்குவது எப்படி என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
அதன் பின்னர் கேள்வி - பதில் செஷன் தொடங்கியது.
உதவி ஆணையர்: காவல்துறை இயக்குனர் யார்?
பெரும்பாலான மாணவர்கள் அமைதியாக இருந்தனர். ஒரே ஒரு பையன் மட்டும் கே.பி. ஜெயின் என்றான்
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பெயர் என்ன என்ற கேள்விக்கு பலரும் பதில் தெரியாமல் முழித்தனர். இதையடுத்து ராஜேந்திரன் என்று உதவி கமிஷனரே கூறினார்.
பின்னர் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் ஆகியோரைக் காட்டி இவர்கள் யார் என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் பதிலளித்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் உள்ள ரைட்டர் அறை, கைதிகள் லாக்கப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர்.
லாக்கப் அறையைக் காட்டிய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், இங்கு தப்பு செய்பவர்களை அடைத்து வைப்போம். யாருமே தப்பு செய்யக் கூடாது, சரியா என்று கூறியதும், சரி சார் என்று மாணவர்கள் கோரஸாக குரல் எழுப்பினர்.
இந்தப் பாடத்திற்கு உடனடி பலன் கிடைத்தது. சுற்றுலாவை முடித்து விட்டு வெளியே வந்த ஒரு மாணவன், நானும் ஒரு நாள் ஏ.சி. ஆவேன். இந்த ஏ.சியைப் போல பாடம் நடத்தாமல் விட மாட்டேன் என்றான்.
போலீஸ் நிலையத்திற்கு வந்த மாணவர்களை வெறும் கையுடன் அனுப்பாமல், பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல், சாக்லேட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பார்சலையம் கொடுத்து அனுப்பினர் காவல்துறையினர்.
வந்து பார்த்து போனதோடு இவர்கள் நின்று விடக் கூடாது என்பதற்காக நீங்கள் காவல் நிலையம் மூலம் என்ன தெரிந்து கொண்டீர்கள் என்பது குறித்த பேச்சுப் போட்டிக்கும் நாளை ஏற்பாடு செய்துள்ளனராம் போலீஸார்.
சென்னை காவல்துறையின் இந்த வித்தியாசமான நிகழ்ச்சி மாணவ, மாணவிகளை வெகுவாக கவர்ந்து விட்டது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications