நெஞ்சு வலி-சிகிச்சைக்கு பின் பயணியை ஏற்ற மறுத்த விமானி
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் ஹஜ் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பி்ன்னர் அவரை மீண்டும் விமானத்தில் ஏற்றி் செல்ல விமானி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானி பிடிவாதமாக இருந்ததால் அந்த பயணியும், அவரது மனைவியும் விமானத்தில் ஏற்றப்படாமல் அந்த விமானம் கிளம்பிச் சென்றது.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஏர்லங்கா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் புனித ஹஜ் யாத்திரை செல்லும் 52 பேர் உள்பட 174 பயணிகள் இருந்தனர். இவர்கள் கொழும்பு சென்று அங்கிருந்து ஜெட்டா செல்ல இருந்தனர்.
விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிய போது, பெங்களூரை சேர்ந்த ஹஜ் பயணி ரஃபி அகமது (55) என்பவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதுபற்றி விமானப் பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் மீண்டும் மீனம்பாக்கத்தில் தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் விமான நிலைய டாக்டர்கள் குழு விரைந்து வந்து விமானத்தில் இருந்த அகமதை பரிசோதனை செய்தனர். அவருக்கு வாயு கோளாறு ஏற்பட்டு இருந்ததையும், இதயக் கோளாறு எதுவும் இல்லை என்பதையும் கண்டுபிடித்தனர்.
மேலும் முதல் முறையாக விமானத்தில் செல்வதால் பயத்தின் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டு இருக்கலாம் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அகமது விமானத்தில் செல்ல முழு தகுதியுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறினார்கள்.
ஆனால் அகமதுவை விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாது என்று விமானி கூறி விட்டார். நடுவானத்தில் விமானம் பறக்கும்போது ரபிக் அகமது மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறினால் பிரச்சினை ஏற்படும். எனவே அவர் விமானத்தில் இருந்து இறங்கினால்தான் விமானத்தை கிளப்புவேன் என்று விமானி திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதற்கு அகமதுவும், அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் ஹஜ் புனித பயணம் செல்கிறோம். பாதி வழியில் பயணத்தை ரத்து செய்தால் சிக்கலாகும் என்றனர்.
ஆனாலும் அந்த இலங்கை விமானி பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் ரஃபி அகமதுவும், அவர் மனைவியும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்களை விட்டு விட்டு பிற்பகலில் அந்த விமானம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications