ரூ. 20 கோடி போதை பொருளுடன் பனியன் நிறுவன ஊழியர் கைது
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ. 20 கோடி மதிப்புள்ள எபிட்டரின் என்ற போதை மருந்து சிக்கியுள்ளது.
திருப்பூர், அவினாசி ரோட்டில் பனியன் கம்பெனி நடத்தி வருபவர் துரைசாமி. இவரது மகன் ரமேஷ் குமார்(30). இவர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நேற்று முன்தினம் கொச்சியில் சிக்கினார்.
அவரது தகவலின் பேரில், கோவை மத்திய சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அருணாசலம், சண்முகராஜன் உள்ளிட்டோர், திருப்பூர் பனியன் நிறுவனத்தில், மேற்பார்வையாளராக வேலை செய்யும், வாலிபாளையத்தில் வசித்து வந்த செல்வக்குமார் (19) வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு, 96.673 கிலோ எபிட்டரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
செல்வக்குமார் காரைக்குடி அருகே உள்ள சிவந்தங்குடியை சேர்ந்த குமரப்பனின் மகன். திருப்பூர் வாலிபாளையத்தில் சித்தப்பா வீட்டில் வசித்து வந்தார். பனியன் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்துவருகிறார்.
கைது செய்யப்பட்ட அவரை, சுங்க இலாகா அதிகாரிகள், விசாரணைக்கு பின், திருப்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2ல் நேற்று ஆஜர்படுத்தினர். செல்வக்குமாரை, டிசம்பர், 8ம் தேதி வரை கோர்ட் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் மலர்மன்னன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார்.
எபிட்டரின், மருந்து தயாரிப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றை உரிமம் இல்லாமல் வைத்திருப்பது, விற்பது சட்டப்படி குற்றம். 1985ம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது செல்வக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடியாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications