பெரிய மிருகங்கள் பலி கூடாது-ராம.கோபாலன்
சென்னை: பொது இடங்களிலோ, வீடுகளிலோ பெரிய மிருகங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தவ்ஹீத் ஜமாத் முதலானவை பக்ரீத்தை முன்னிட்டு மாடு, ஒட்டகம் போன்றவற்றை வெட்ட ஆங்காங்கே விளம்பரங்கள் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
பசுவை, மாடுகளைப் பலியிடுவது இந்துக்களுக்கு விரோதமானதும், இயற்கை விவசாயத்தை சீரழித்து நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சதிச் செயல். இதை இயற்கை ஆர்வலர்கள் தேச பக்தர்கள் கண்டிக்க, தடுக்க முன் வரவேண்டும்.
பொது இடங்களிலோ, வீடுகளிலோ பெரிய மிருகங்களை வெட்டுவதைத் தடுப்பதற்கு போலீஸ் துறையின் சட்டமே போதுமானது. இதனை சட்டத்தின் துணை கொண்டு தடுத்திட போலீஸ் துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் கருத்தின் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் ஐகோர்ட்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதனை போலீஸ் துறை தடுக்க மறுத்தாலோ, மெத்தனமாக செயல்பட்டாலோ, சட்டவிரோத செயலை தடுக்க தவறிய செயலுக்காக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் செல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
பத்திரிகையாளர்களும், பிராணி வதைத் தடுப்பு குழுக்களும், இயக்கங்களும் கண்காணித்து போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். போலீஸ் துறை மெத்தனப் போக்காக செயல்படுமானால் இக்கொடுஞ்செயலை எதிர்த்து மக்கள் போராடவும் தயங்க மாட்டார்கள் என்று இந்து முன்னணி எச்சரிக்கிறது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications