பிரபல பெயர்களில் போலி 'பாடி ஸ்பிரே'
சென்னை: டெனிம் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'பாடி ஸ்பிரே' பாட்டில்களை சென்னைத் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
சீனாவில் இருந்து 2 கன்டெய்னர்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இவற்றின் விற்பனை மதிப்பு, ரூ.2 கோடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று கடந்த வாரத்திற்கு முன்பு வந்தது. அந்த கப்பலை சுங்கத்துறை ஆணையர் ராஜன் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கப்பலில் இருந்த 2 கன்டெய்னர்களில் டெனிம், ரெவிலான், மேக்ஸி, மூன் டிராப்ஸ், டாமிகேர்ஸ் உட்பட பல வகையான வாசனை திரவிய பாட்டில்கள் இருந்தன.
இவை அனைத்தும் லிம்ரா என்ற நிறுவனத்தின் பெயரில் அலிகான் என்பவருக்கு வந்திருந்தது. ஆவணங்களில் இருந்த தகவல்களால் சந்தேகமடைந்த அதிகாரிகள், பொருட்களை ஆய்வுக்கு அனுப்பினர்.
இதில் இருந்த டெனிம் பாட்டில்கள் தங்களின் தயாரிப்பு இல்லை என்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துவிட்டது. மேலும் அதில் இருந்த அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இறக்குமதி செய்த அலிகானிடம் போலீசார் விசாரித்தபோது, 'ஒரிஜினல் தான் கேட்டேன். போலி சரக்குகளை அனுப்பிவிட்டார்கள்' என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து சுங்கத்துறை ஆணையர் ராஜன் கூறுகையில், 'கைப்பற்றப்பட்ட பொருட்களின் விற்பனை மதிப்பு, ரூ.2 கோடியை தாண்டும். இந்த வாசனை திரவியங்கள் அனைத்தும் காலாவதியானவை மற்றும் போலியாக தயாரிக்கப்பட்டவை.
பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். ஆனால், உள்ளேயிருப்பது அபாயகரமானது. இவற்றை பயன்படுத்தினால் தோல் நோய் ஏற்படும்' என்றார்.
விமான நிலையத்தில்...:
விமான நிலைய சரக்குப் பிரிவில், லஞ்சம் வாங்கிக்கொண்டு பொருட்களை சோதனையிடாமலும், வரியினங்களை குறைத்தும் அதிகாரிகள் முறைகேடு செய்வது குறித்து பரவலாக புகார்கள் இருந்து வந்தன.
இதுதொடர்பாக இருதினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, அதிகாரிகள் மற்றும ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டனர்.
இதன் எதிரொலியாகவே துறைமுகங்களிலும் சுங்க அதிகாரிகள் மிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.
சென்னை விமான நிலைய அதிரடி சோதனையின் போது சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 800 பார்சல்களை பட்டுவாடா செய்ய தடை விதித்திருந்தனர்.
தற்போது, 5 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் குழு இப்பார்சல்களை பிரித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றை ஆய்வு செய்து முடிக்க ஒரு வாரமாவது ஆகும். அப்போது மேலும் அதிரடி கைது நடவடிக்கைகள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications