துபாய் நிதி நெருக்கடி-கை கழுவும் அரசு!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து துபாய் அரசின் நிதித்துறை டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் அல் சலே கூறுகையில், துபாய் வேர்ல்டு நிறுவனம் அரசுக்குச் சொந்தமானது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.
அதேநேரம் அரசுக்கு சொந்தமான பங்குகள் மற்றும் அரசின் கட்டுப்பாடு இதில் உள்ளது. அவ்வளவுதான். இந்த நிறுவனத்தின் கடன் 26 பில்லியன் டாலர் மட்டுமே. அதுவும் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வந்த நெருக்கடி மட்டுமே.
இன்னொரு விஷயம், துபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கடன் தந்தவர்களுக்கும் இந்த நெருக்கடியில் பங்குள்ளது. கடன் தரும்போது, அதற்கான பொறுப்பில் ஒரு பகுதி அவரையும் சாரும். இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது.
மற்ற நிறுவனங்களான டிபி வேர்ல்டு, ஜபில் அலி ப்ரீ ஸோன் போன்றவை எந்த நெருக்கடிக்கும் உள்ளாகவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications