தமிழகத்திற்கு 2 நாட்கள் பலத்த மழை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Satellite image of Tamil Nadu
சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் வடக்கு கடலோரத்தில் பரவலாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இன்று பிற்பகல் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை..

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும்.

இன்றைய மழை அளவு..

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் வல்லத்தில் 11 செமீ பெய்தது. ஓரத்தநாடு, மணிமுத்தாறில் தலா 9, கொல்லிடம், சீர்காழி, தூத்துக்குடியில் தலா 7 செமீ, அண்ணா பல்கலைக்கழகம் 6, டிஜிபி அலுவலகம், காட்டுமன்னார்கோவில், பட்டுக்கோட்டை, திருச்சி தலா 5, ராமேஸ்வரம், ஜெயங்கொண்டம் தலா 4, சோழவரம், பரங்கிப்பேட்டை, வேதாரண்யம், கரம்பக்குடி, முதுகுளத்தூர், பாம்பன், அரியக்குடி, சாத்தான்குளம், மங்களாபுரம், வாழப்பாடி தலா 3, சென்னை, சென்னை விமான நிலையம், பொன்னேரி, தொழுதூர், புதுச்சேரி, அதிராம்பட்டினம், முடுக்கூர், முத்துப்பேட்டை, வலங்கைமான், பரமக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், பேச்சிப்பாறை, போளூர், ஆத்தூர், குன்னூர், கேத்தி, தோகைமலை, மானாமதுரை தலா 2, செங்கல்பட்டு,தாம்பரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை, வானூர், தஞ்சை, பாபநாசம், திருவையாறு, குடவசால், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், பாளையங்கோட்டை, நாங்குனேரி, தென்காசி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, சூளகிரி, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ஓமலூர், தாராபுரம், காங்கேயம், மூலனூர், கரூர் பரமத்தி, கரூர், அரவக்குறிச்சி, கடவூர், மாயனூர், செட்டிக்குளம், பாடலூர், மணப்பாறை, திருச்சி, தேவகோட்டை, கோவிலாங்குளம், திருச்சுழி தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

5ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பு..

வடக்கு கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மீதமுள்ள தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக கன மழை பெய்யும்.

சென்னையில் பரவலாக கன மழை..

தலைநகர் சென்னையில் நேற்று காலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பெரிய கன மழையாக இல்லாமல் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ஏற்கனவே பழுதடைந்திருந்த சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளன.

இன்று காலை முதல் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் லேசான மழை காணப்படுகிறது.

லீவு விடாததால் மாணவர்கள் பாதிப்பு:

பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தும் கடலோர மாவட்டங்கள் பலவற்றில் பள்ளிகளுக்கு விடுமுறை விடாததால் பள்ளிக் குழந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளி்ல் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தஞ்சையில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிற பகுதிகளில் விடுமுறை விடப்படவில்லை.

தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பிற்பகலுக்கு மேல் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

மழை வரும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. மாறாக காலையில் மழைக்கு மத்தியில் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரம் பார்த்து கன மழை பெய்து வருவதால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+