தொடர் விபத்து-சுகோய் போர் விமானங்கள் தரையிறக்கம்
குவஹாத்தி: தொடர் விபத்துகள் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானப் படையின் சுகோய் போர் விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட இந்த அதிநவீன சுகோய்-30எம்கேஐ போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஆனால், இரு தினங்களுக்கு முன்பு சுகோய் போர் விமானம் பொக்ரான் அருகே விழுந்து நொறுங்கியது.
இதேபோல், கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒரு சுகோய் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த துணை பைலட் உயிரிழந்தார். சுகோய் விமானப் படையில் இணைக்கப்பட்ட 12 ஆண்டுகளில் தற்போது 2முறை தொடர்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படையில் உள்ள 98 சுகோய் போர் விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையாக ஆராயப்பட்ட பின்னர் இவை வழக்கம் போல இயக்கப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு சுகோய் போர் விமானத்தின் மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் விமானத்தை இயக்க ஒவ்வொரு விமானிக்கும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
20 ஆண்டுகளில் 265 மிக் ரக விமானங்கள் விபத்து:
இந் நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 265 மிக் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி மக்களவையில் தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில் 96 விமானப்படையினரும், 44 பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மட்டும் மூன்று மிக் 21, மூன்று மிக் 27 ரக விமானங்களும், இரு சுகோய் ரக விமானங்களும் 2009ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications