நெல்லை கடைகளி்ல் ஏப். முதல் 'பிளாஸ்டிக் பை'க்கு தடை
நெல்லை: நெல்லையில் உள்ள ஐவுளிக் கடைகள், வர்த்தக நிறுவனங்களி்ல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில், மறு சுழற்சிக்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் ஜெயராமன் பேசுகையில்,
பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோர் அனைவரும் பொது நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் சேருவதால், நிலத்தடி நீர் கசப்பு தன்மை அடைவதோடு விஷத் தன்மையாக மாறுகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கிராம அளவிலும், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும்.
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் திருமண மண்டபங்கள், டீக்கடைகளில் 'யூஸ் அண்ட் த்ரோ' எனப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை பயன்படுத்த கூடாது. வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், ஐவுளி கடைகள் ஆகியவை இவற்றை உபயோகிக்க கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications