18 மருத்துவ, 7 நர்சிங் கல்லூரிகள்-ரயில்வே திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை உட்பட 18 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்வேத் துறை இணையமைச்சர் கே.எச்.முனியப்பா இதுகுறித்து லோக்சபாவில் தெரிவித்ததாவது: தனியார் துறை ஒத்துழைப்புடன் மேலும் 18 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை, ஐதராபாத், பிலாஸ்பூர், லக்னோ, பராசாத், புவனேஷ்வர், மைசூர், காரக்பூர், கவுகாத்தி, திப்ருகார்க், ஜோத்பூர், கார்டன்ரீச், நாக்பூர், அகமதாபாத், கோல்கத்தா, போபால், ஜம்மு மற்றும திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
அதேபோல், தற்போதுள்ள ரயில்வே மருத்துவமனைகளில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகள் இணைக்கப்படும். டெல்லி, கோல்கத்தா, மும்பை கல்யாண், சென்னை, செகந்திராபாத், லக்னோ மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications