வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றார் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் வெங்கடராமனுக்கு, ஸ்வீடன் மன்னர் 16ம் கார்ஸ் குஸ்டப் வழங்கினார்.
இதேபோல, இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம் ஆகியவற்றுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு சாதனை அளவாக ஐந்து பெண்கள் நோபல் பரிசினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1952ம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்த வெங்கடராமன் தற்போது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் எம்.ஆர்.சி. மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் மூத்த விஞ்ஞானியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடா யோனாத், தாமஸ் ஸ்டெயிட்ஸ் ஆகியோருடன் வேதியியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டுள்ளார் வெங்கி.












Click it and Unblock the Notifications