உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சலை பிரிக்க மாயாவதி வலியுறுத்தல்- பிரதமருக்குக் கடிதம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தைப் பிரித்து பூர்வாஞ்சல் பகுதியை தனி மாநிலமாக அமைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உ.பி முதல்வர் மாயாவதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கூடுதல் கேபினட் செயலாளர் விஜய்சங்கர் பாண்டே நிருபர்களிடம் கூறுகையில், 'தனி பூர்வாஞ்சல் மாநிலம் உருவாக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி மாநில முதல்வர் மாயாவதி பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான அரசியல் நடைமுறைகளை துரிதப்படுத்துமாறு அவர் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இதுதொடர்பாக தமது கருத்தை மாநில அரசு கடிதம் மூலம் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி விட்டது' என்றார்.
தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு தனது அறிவிப்பை வெளியி்ட்டதை அடுத்து உ.பி.யில் புந்தல்கண்ட் மற்றும் பாஸ்சிமான்ச்சல் பகுதியை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என மாயாவதி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications