கண்ணாடி வெடித்துச் சிதறியதில் எஸ்.வி.சேகர் காயம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் சென்ற எஸ்வி சேகர் தலையில் கண்ணாடித் துண்டு பலமாகக் குத்தியதில் அவர் காயமடைந்தார்.
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக, சென்னை தி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார்.
அங்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அடையாளமாக, கேக் வெட்டும்போது பலூன்கள் வெடிக்கப்பட்டன. பலூன்களுடன், அரங்கின் மேல் கூரையில் இருந்த கண்ணாடிகளும் வெடித்து சிதறின. கண்ணாடி சிதறல்கள், எஸ்.வி.சேகரின் தலையில் குத்தின. அவர் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
உடனடியாக, பிறந்தநாள் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டு, எஸ்.வி.சேகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருடைய தலையில் 3 தையல்கள் போடப்பட்டன. பின்னர் வீடு திரும்பினார் சேகர்.












Click it and Unblock the Notifications