உலகின் டாப் 5 சிஇஓக்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி!
டெல்லி: உலகின் டாப் 5 சிஇஓக்களில் ஒருவராக முகேஷ் அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் பிரபலமானதும் மதிப்புக்குரியதுமான ஹார்வர்ட் பிஸினஸ் ரிவ்யூ இதனை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள முதல் 50 சிஇஓக்களைத் தேர்வு செய்து, அவர்களில் முதல் 5 சிஇஓக்களை அறிவித்துள்ளது இந்த ஆய்வு.
இந்த 50 சிஇஓக்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நிர்வாகி முகேஷ் அம்பானிதான். அவரது தம்பியும் அனில் திருபாய் அம்பானி குழும தலைவருமான அனில் அம்பானிகூட இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் தவிர, ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவவ் ஜாப்ஸ், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் யுன் ஜாங் யங், ரஷ்ய நிறுவனமான காஸ்ப்ரோமின் அலெக்ஸி மில்லர் மற்றும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ் ஆகியோரும் இந்த டாப் 5 பட்டியலில் உள்ளன.
இதுதவிர, சர்வதேச அளவில் முதல் பத்து இடங்களில் வரும் சிஇஓக்கள் பட்டியலில் முகேஷுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தை அலெக்ஸி மில்லர் பெற்றுள்ளார்.
இந்த சர்வேயில் 2000 சிஇஓக்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவர்களிலிருந்து 50 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அவர்களிலிருந்து 10 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். இறுதியாகத்தான் டாப் 5 சிஇஓக்கள் பட்டியல் தயாரானது.












Click it and Unblock the Notifications