முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: விஎச்பி-பாஜக கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Praveen Togadia
டெல்லி & அகமதாபாத்: மத்​திய,​​ மாநில அர​சு​ வேலை​ வாய்ப்​பு​க​ளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்​கீ​டு வழங்கக் கோரி பரிந்துரை செய்துள்ள நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

இந்த அறிக்கைக்கு பாஜகவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

விஎச்பி பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறுகையில்,

இந்த அறிக்கை அரசியல் சட்டத்துக்கும், இந்துக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமானது. இதை ஏற்கவே முடியாது. சோனியா காந்தி சொல்லிவிட்டதால் முஸ்லீம்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் வேலைவாய்ப்பி்ல் இட ஒதுக்கீடு வழங்குவது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முஸ்லீம்களாக, கிருஸ்துவர்களாக மாறிய தலித்களுக்கும் எஸ்.சி. கோட்டாவில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்கிறது இந்த அறிக்கை. தங்கள் மதத்தில் ஜாதியே கிடையாது என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லீமகளும், கிருஸ்துவர்களும் ஏன் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டும்?.

இஸ்லாமிய சட்டத்தைச் சொல்லி மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயலாதவர்கள் இந்த அறிக்கையை அமலாக்கினால் அது ஜிகாத் சக்திகளுக்கே மேலும் உறுதுணையாக அமையும் என்றார் தொகாடியா.

காங்​கி​ரஸ் வர​வேற்பு:

இந்த கமிஷன் அறிக்கை குறித்து காங்​கி​ரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்​பா​ளர் அபி​ஷேக் சிங்வி கூறுகையில்,

மிக​வும் நுட்​ப​மாக ஆய்ந்து நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா,​​ தனது அறிக்​கையை தாக்​கல் செய்​துள்​ளார்.​ இதில் குறிப்​பிட்​டுள்ள அம்​சங்​கள் வர​வேற்​கத்​தக்​கவை.​

இந்த பரிந்​து​ரை​கள் குறித்து விரி​வான விவா​தம் நடத்தி அதை நடை​மு​றைப்​ப​டுத்த முயற்சி மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றார்.​

மதமாற்றத்தை தூண்டும் அறிக்கை-பாஜக:

பாஜக செய்​தித் தொடர்​பா​ளர் ராஜீவ் பிர​தாப் ரூடி கூறுகையில்,

ரங்​க​நாத் மிஸ்ரா பரிந்​து​ரை​கள்,​​ மத​மாற்​றத்தை ஊக்​கு​விக்​கும் வகை​யில் உள்​ளன.​ மேலும்,​​ தாழ்த்​தப்​பட்​டோர் மற்​றும் பழங்​கு​டி​யி​ன​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள சலு​கை​களை இந்த பரிந்துரைகள் பாதிக்கும். இந்த பரிந்​து​ரை​ நாட்​டுக்கு பய​னற்​றது என்​றார்.

லாலு-பாஸ்வான் ஆதரவு:

இந்த அறிககைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதன் பரிந்துரைகளை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் குதிப்பேன். அரசு வேலைகளில் சிறுபான்மையினர் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர். இதனால் இந்த அறிக்கையை அமல்படுத்துவத மிக மிக அவசியம் என்றார்.

லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களும கிருஸ்தவர்களும் மிகக் குறைவாகவே உள்ளனர். இதனால் அவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+