மகாபலிபுரம் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் அருகே ஒரு தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு போய்க் கொண்டிருந்தது. எண்ணை நிறுவனம் ஒன்று இந்த ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தியிருந்தது.
வரும் வழியில் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் மகாபலிபுரம் அருகே சூலேரிகாட்டுப்பாக்கம் என்ற இடத்தில் தனியார் ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமான இடத்தில் அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் பைலட் மட்டுமே இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications