கன மழை- தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோரங்களில் கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
தஞ்சையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலைதான் திருவாரூர், நாகையிலும் காணப்படுகிறது. மழை மேலும் 24 மணி நேரத்திற்குப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் வேறு தேதியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications