For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இது திமுகவுக்கும் கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக வெற்றி குறித்து...?

கருணாநிதி: மகத்தான வெற்றியை இடைத்தேர்தலில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. வாக்களித்த மக்களுக்கு-மகத்தான வெற்றியை இந்த கூட்டணிக்கு வழங்கிய மக்களுக்கு திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறதே?

கருணாநிதி: திமுக அரசின் சாதனைகள், மக்கள் தொடர்பு, மக்கள் பிரச்சினையில் காட்டுகிற அக்கறை ஆகியவை காரணமாக மக்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களித்திருக்கிறார்கள்.

கேள்வி: அனிதா ராதாகிருஷ்ணன் போல் மேலும் எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வருவார்களா?

கருணாநிதி: வந்தால் உங்களுக்கே தெரியும்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயம் ஆக்கும் சட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா?

கருணாநிதி: அந்த கருத்தில் இருவேறு அபிப்பிராயங்கள் தமிழக தலைவர்களால் சொல்லப்படுகிறது. பழுத்து வந்தபிறகு என் கருத்தை சொல்கிறேன்.

இதற்கிடையே அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X