ஜென்டா மார்ட்கேஜ் உருவாக்கும் 1000 புதிய வேலைகள்!

Subscribe to Oneindia Tamil

Zenta
சார்லோட் (வடக்கு கரோலினா): கால் சென்டர் மற்றும் கடன் சேவைப் பிரிவில் 1000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது ஜென்டா மார்ட்கேஜ் சர்வீஸஸ் நிறுவனம்.

அமெரிக்காவில் புதிய பணிகளை உருவாக்குவதைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஒபாமா அரசு, இந்த முயற்சியில் அரசுடன் ஒத்துழைக்கும் பல்வோறு நிறுவனங்களுக்கும் நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்காவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளன.

ஜென்டா மார்கேஜ் நிறுவனத்தின் சார்லோட் கிளையில் மட்டும் தற்போது 260 பணியாளர்கள் உள்ளனர். இப்போது அரசின் ஆதரவில் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதுடன், ஆண்டுக்கு 48000 டாலர் சம்பளத்துடன் கூடிய புதிய பணிகளையும் உருவாக்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த விரிவாக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது ஜென்டா மார்கேஜ்.

இதனால் நிறுவனத்துக்கு 8.6 மில்லியன் டாலர் அளவுக்கு நிதிச் சலுகைகளை அரசு வழங்கும்.

நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் ஜென்டா மார்ட்கேஜுக்கு லண்டன், டல்லாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இந்தியாவில் சென்னை, மும்பை நகரங்களில் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+