நாடாளுமன்றம் சென்றுள்ள கோடீஸ்வர எம்பிக்கள்!
டெல்லி: இந்திய நாடாளுமன்றத்திலேயே அதிக சொத்துக்களைக் கொண்ட எம்பி தெலுங்கு தேசம் கட்சியின் நமநாகேஸ்வ ராவ்தானாம்.
இவரது சொத்து மதிப்பு ரூ.173 கோடி என தேர்தல் கமிஷனுக்கு கணக்கு காட்டியுள்ளார். ஆந்திராவின் கம்மம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவர், தனது தேர்தல் செலவாக ரூ.13 லட்சம் கணக்குக் காட்டியுள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தைப் பெற்றுவர் அரியானா மாநிலம் குருஷேத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவீன் ஜிண்டால். இவரது சொத்து மதிப்பு ரூ. 131 கோடி. தேர்தலுக்கு ரூ. 17.92 லட்சம் செலவழித்துள்ளார் இவர்.
விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் சொத்து மதிப்பு ரூ.122 கோடி. தேர்தலில் செலவழித்த தொகை 11.14 லட்சமாம்.
உஸ்மனாபாத் தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பாதம்சிங் பட்டேலின் சொத்து மதிப்பு ரூ.105 கோடி. இவர் தேர்தலுக்காக் ரூ.20 லட்சம் செலவழித்து வெற்றி பெற்றுள்ளார்.
மறைந்த ஆந்திர முதல் மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.72 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தேர்தலில் செலவிட்ட தொகை ரூ.11 லட்சம் என்று கூறியுள்ளார்.
ரெட்டிக்கு ஏராளமான வணிக நிறுவனங்களும் பத்திரிகைகளும் சொந்தமாக உள்ளன.


Click it and Unblock the Notifications
