தமிழர் முகாமில் பெண்கள், சிறார்கள் மீது துப்பாக்கிச் சூடு-ஐவர் காயம்

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர் என வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த 5 பேரும் முகாமிலிருந்து விறகு சேகரிக்கச் சென்றபோதே ராணுவத்தினர் சுற்றி வளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
ராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்தனர். அதையடுத்துத் தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications